ரெட்டை ரோஜா, பகல் நிலவு ஆகிய சீரியல்களில் நடித்து தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பிரபலமான நடிகை ஷிவானி நாராயணனுக்கு பெரிய ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. சீரியல்களைத் தாண்டி, சமூக ஊடகங்களில் அழகழகான புகைப்படங்களை வீடியோக்களை வெளியிட்டு கலக்கினார். ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த சூழலில்தான் ஷிவானி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிக் பாஸ் வீட்டில் இளைஞர்களைக கவர்ந்த போட்டியாளர் ஷிவானி நாராயணன். ஷிவானி அமைதி காப்பது பலருக்கும் சற்று ஏமாற்றமாக இருக்கிறது. இந்த வார எவிக்ஷனில் இருந்தும் காப்பாற்றப்பட்டார் ஷிவானி. போட்டியாளர் பாலாவுடன் நட்பாக உள்ளாரா அல்லது காதலில் உள்ளாரா என்பதே இதுவரை பிக்பாஸ் ரசிகர்களுக்கு தெரியவில்லை. 

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் நடந்த ஒரு பஞ்சாயத்தில் ஷிவானியை தெரியாமல் தாக்கியுள்ளார் நிஷா. அர்ச்சனா மற்றும் நிஷாவிற்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் போது வேடிக்கை பார்க்க சென்ற ஷிவானிக்கு பஞ்ச் ஒன்றை தந்தார் நிஷா. அம்மாடி என்ன அடி என்று கமெண்ட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். அதன் பிறகு அந்த பக்கமாகவே ஷிவானி இல்லை. வேறொரு திசையை நோக்கி நகர்ந்து விட்டார். 

நேற்று தொடங்கிய ரோபோ vs மனிதர்கள் டாஸ்க் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடந்து இருக்கிறது. ரோபோ டீமில் நேற்று இருந்தவர்கள் இன்று மனிதர்கள் டீமுக்கு மாறி இருக்கிறார்கள். அர்ச்சனா நேற்று ரோபோவாக இருந்தபோது அவரை அழவைப்பதற்காக நிஷா அவரது அப்பாவின் மரணம் பற்றி பேசினார். அப்போது அர்ச்சனா எதுவும் ரியாக்ட் செய்யாமல் மிகவும் பொறுமையாக இருந்தார். ஆனால் அதற்கு பிறகு நிஷாவிடம் சண்டை போட்டு கதறி அழுதார்.

தொடர்ந்து பேசும் அர்ச்சனா கேம்னு வந்தா நான் ரொம்ப சீரியஸா விளையாடுவேன், விளையாடத என்று நிஷாவை அதட்டும் அர்ச்சனா அவரை தொங்க சொல்கிறார். மேலும் உங்களுக்கு என்னுடைய சோகமும் கோவமும் எந்தளவுக்கு தெரியுமோ அந்தளவுக்கு உங்க சோகமும் கோபமும் எனக்கும் தெரியும் என்றார்.

மேலும் நேத்து என்னலல்லாம் பேசுச்சு தெரியுமா என நிஷாவை பற்றி ரம்யாவிடமும் போட்டுக்கொடுத்தார். தொடர்ந்து குரூப்பாக சேர்ந்து நிஷாவை வச்சு செய்கிறார் அர்ச்சனா. இந்த ப்ரோமோவின் மூலம் அர்ச்சனா நிஷாவை பழிக்கு பழி வாங்குவது தெரியவந்துள்ளது. மோசமான பாடி லாங்குவேஜை காட்டியும் வெறுப்பேற்றியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்று இரவு தரமான சம்பவங்கள் இருக்கு என தெரிவித்து வருகின்றன்றனர். நேற்றை போலவே இன்றும் டாஸ்க் முடிந்ததும் சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.