தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக விளங்கும் சினேகன் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.சினிமாவில் பாடலாசிரியராகவும் நடிகராகவும் வலம் வரும் சினேகன் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த சினேகன்  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் விருகம்பாக்கம் தொகுதியில்  போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் பாடலாசிரியர் கவிஞர் சினேகனுக்கு திருமணம் நடைபெற்றது.

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளரும் சீரியல் நடிகையுமான நடிகை கன்னிகா ரவியை பாடலாசிரியர் சினேகன் திருமணம் செய்து கொண்டார்.நடிகை கன்னிகா ரவி இயக்குனர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த அடுத்த சாட்டை திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவியின் திருமணம் உலக நாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் கடந்த ஜூலை 29ஆம் தேதி நடைபெற்றது . 

இந்நிலையில் நடிகை கன்னிகா ரவி கவிஞர் சினேகன் இருவரும் காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது...முதல் புகைப்படம்...2014...வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க...கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்...அன்புடன் ,   கன்னிகா சினேகன் என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.