சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முன்னணி நடன இயக்குனராகவும் சிறந்த நடன கலைஞராகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சாண்டி மாஸ்டர். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சாண்டி மாஸ்டர், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்து வருவதோடு தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

3:33 என பெயரிடப்பட்டுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர உள்ள நிலையில் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தனது செல்ல மகனுக்கு ஷான் மைக்கேல்ஸ் என பெயர் சூட்டி முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ல மகனின் புகைப்படத்தை வெளியிட்டார் சாண்டி மாஸ்டர். சாண்டி மாஸ்டரின் செல்ல மகனின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDY (@iamsandy_off)