சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழக ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் அடைந்தவர் முகென். மலேசிய வாழ் தமிழராக பல தமிழ் சுயாதீன பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த முகென் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக இயக்குனர் கவின் இயக்கத்தில் உருவான வேலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான முகென் அடுத்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மதில் மேல் காதல். ரொமான்டிக்கான காதல் படமாக தயாராகியுள்ள மதில் மேல் காதல் படத்தில் பேச்சுலர் படத்தில் பலரது கவனத்தை ஈர்த்த நடிகை திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சாக்ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, சுப்பு பஞ்சு, KPY பாலா, பாண்டிராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷீரடி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள மதில் மேல் காதல் படத்தை வெப்பம் திரைப்படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் எழுதி இயக்கியுள்ளார். 

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவில், ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள மதில் மேல் காதல் படத்திற்கு நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். முன்னதாக மதில் மேல் காதல் படத்திலிருந்து முதல் பாடலாக நெஞ்சோரமா பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மதில் மேல் காதல் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.