விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

இதனை அடுத்து இவர் நடித்த அஸ்கு மாறோ என்ற ஆல்பம் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இவர் நடித்த லிப்ட் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி டாக்டர்,Beast உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தினார் கவின்.இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன்,நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் ஊர்குருவி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.கவின் ஆகாஷ் வாணி என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருந்தார்,இந்த வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தவிர ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கவின்.அபர்ணா தாஸ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.கணேஷ் கே பாபு இந்த படத்தினை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பட பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.