இன்ஸ்டாவை அசத்தும் கவினின் வைரல் புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | August 10, 2020 17:57 PM IST

பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார்.
பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த அமிர்தா ஐயர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.வினீத் வரப்ரஸாத் இந்த படத்தை இயக்குகிறார்.பிரிட்டோ மைக்கேல் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்திற்கு லிப்ட் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இன்று படத்தின் நாயகன் கவினின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிகில் படத்தில் நடித்த காயத்ரி ரெட்டி நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.நேற்று தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பேசி வந்த காயத்ரி ரெட்டி இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.அமிர்த்தா ஐயர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் காயத்ரி ரெட்டி.இருவரும் இணைந்து பிகில் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படத்தின் நாயகன் கவின் தனது டப்பிங் வேலைகளை முடித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் பதிவிட்டுள்ளார்.அதோடு படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்துள்ளது என்று தெரிகிறது.இதனை தொடர்ந்து படத்தின் டீஸர் அல்லது ட்ரைலரை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தற்போது கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார் கவின்,அதில் தனது அம்மா,அப்பாவை அடுத்து நீ தான் என்கூடவே இருக்கிறாய் என்று தனது டேபிள் ஃபேனை போட்டோ எடுத்து போட்டுள்ளார்.அதோடு நம் இருவருக்கும் வயது 30 ஆகி விட்டது என்று தெரிவித்துள்ளார் கவின்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த போஸ்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்
G.V.Prakash makes an exciting announcement on his next!
10/08/2020 05:35 PM
Bharathiraja condemns Meera Mitun for her controversial videos | Suriya | Vijay
10/08/2020 03:35 PM
Deepest Condolences to actor Kumki Ashvin
10/08/2020 02:58 PM