விஜய் டிவியில் கடந்த 2019 பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் தொடராக உருவெடுத்துள்ளது பாரதி கண்ணம்மா.பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வருகிறார்.ரூபா ஸ்ரீ,கண்மணி மனோகரன்,பாரினா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.500 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விஜய் டிவியின் முக்கிய தொடராக அசத்தி வருகிறது.

இந்த தொடரில் ரோஷ்ணி ஹரிப்ரியன் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இந்நிலையில் சில காரணங்களால் இவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்இவருக்கு பதிலாக வினுஷா தேவி இந்த தொடரில் ஹீரோயினாக இணைந்துள்ளார்.

இந்த தொடரின் சிறப்பு எபிசோடு ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது.இதில் சிறப்பு தோற்றத்தில் பிரபல தொகுப்பாளினியும்,பிக்பாஸ் 4 போட்டியாளருமான அர்ச்சனா VJ நடித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.