தமிழ் திரையுலகின் முன்னணி மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வெளிவந்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நடிகை வனிதா, சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகை வனிதா.

கொடூரன் என பெயரிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் நடிகை வனிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இதனை  அறிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். நடிகை வனிதா அடுத்ததாக அனல்காற்று, அந்தகண், சிகப்பு மனிதர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.