விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தர்ஷன் ,பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3-ன் வெற்றியாளராகவில்லை என்றாலும் மக்களின் இதயங்களை வென்றார். இலங்கை தமிழரான தர்ஷன்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த மாபெரும் வரவேற்பையடுத்து தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகன் ஆனார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் ரீமேக்-ஆக தமிழில் தயாராகும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்யா கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கூகுள் குட்டப்பா திரைப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் ஆர்கே செல்லுலாய்ட் சார்பில் தயாரித்துள்ளார். கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. கே எஸ் ரவிக்குமார் பிக் பாஸ் தர்ஷன் யோகி பாபு மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா ஆகியோரின் கலகலப்பான இந்த கூகுள் குட்டப்பா டீசர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.