ஹீரோவாக பிக்பாஸ் தர்ஷன்!-புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | August 01, 2021 19:06 PM IST

இலங்கை தமிழராக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த தர்ஷன் ,பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3-ன் வெற்றியாளராகவில்லை என்றாலும் மக்களின் இதயங்களை வென்று வாகை சூடினார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து தற்போது தர்ஷன் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக களம் காண்கிறார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் ரீமேக்-ஆக தயாராகும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்யா கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கூகுள் குட்டப்பா திரைப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களின் ஆர்கே செல்லுலாய்ட் சார்பில் தயாரித்துள்ளார். மகல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் ஆர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கூகுள் குட்டப்பா திரைப்படத்திலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Mark the date! The First Look of #KoogleKuttapa to be released on August 3 at 6 PM!@ksravikumardir @Sabari_gireesn @gurusaravanan @TharshanShant #Losliya @iYogiBabu @Prankster_Ragul @editorpraveen @twitavvi @Kavitha_Stylist @proyuvraaj pic.twitter.com/wUGKNXOvU8
— Ghibran (@GhibranOfficial) August 1, 2021
Watch the new promo glimpse from Dulquer Salmaan's next film with Mrunal Thakur!
01/08/2021 03:24 PM