ராஜா ராணி படத்தில் சிறிய ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதைத்தொடர்ந்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாம் சீசன் மூலம் உலகளவில் பிரபலமானார் சாக்ஷி. அதன் பிறகு சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார். 

சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், பகீரா, அரண்மனை 3 , புரவி, தி நயிட் என பல படங்களில் நடித்துள்ளார். விரைவில் படங்கள் ரிலீஸ் ஆகும். சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியான ஆர்யாவின் டெடி படத்தில் மனோதத்துவ டாக்டர், பிரியா என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சின்ன ரோல் தான் எனினும் இணையத்தில் பலரது கவனத்தையும் இப்படம் அவருக்கு பெற்று கொடுத்தது.

இந்நிலையில் புதிய போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாக்ஷி. வழக்கம் போல தனது ஃபிட்டான உடம்பு தெரியும்படி அசத்தியுள்ளார் சாக்ஷி.

ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்ட இவர் தினமும் விதவிதமாக போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு எனர்ஜியை தந்து வருகிறார். இவருடைய போஸ்ட் பார்ப்பதற்காகவே பலர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் வந்து போய்க் கொண்டிருக்கின்றனர்.

சினிமாக்களில் தற்போது இவர் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு புது உலகத்தைக் காட்டியது இன்ஸ்டாகிராம் தான் .அதனால் தான் இவர் தினமும் நாள் தவறாமல் அவருடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி தரிசனத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை ஆளாளுக்கு போட்டோஷூட் நடத்த ஆரம்பித்து அதகளம் செய்து வருகிறார்கள்.

ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் சாக்ஷி. நந்தா இயக்கிய 120 hours திரைப்படமாகும். சமீபத்தில் நான் கடவுள் இல்லை படத்தின் டப்பிங் பணிகளை முடித்தார் சாக்ஷி. இயக்குனர் SA சந்திர சேகர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சமுத்திரக்கனியுடன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தியிருந்தார் சாக்ஷி. சாக்ஷியின் இந்த செயலை பாராட்டி பதிவு செய்திருந்தனர் அவரது ரசிகர்கள்.