வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் புதிய வீடியோ !
By Aravind Selvam | Galatta | June 09, 2021 19:11 PM IST

பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.
பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் லாஸ்லியா ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் Friendship படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் லாஸ்லியாஇதனை தொடர்ந்து நெடுஞ்சாலை,மாயா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி நடிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
அடுத்ததாக ராட்சசன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த Axxess பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜசரவணன் இயக்கவுள்ளார்.பூர்ணேஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இதனை தொடர்ந்து Android Kunjappan தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் படத்தில் தர்ஷனுடன் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் லாஸ்லியா.தற்போது தனது புதிய போட்டோஷூட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
Vijay TV's serial actor now enters Sun TV in style - Big announcement made!
09/06/2021 04:31 PM
Big important clarification on Power Star Pawan Kalyan's next film!
09/06/2021 04:00 PM