பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.இலங்கையில் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் இந்த பிக்பாஸ் தொடரின் மூலம் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார்.

பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் லாஸ்லியா ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் Friendship படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் லாஸ்லியா.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை,மாயா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி நடிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் லாஸ்லியா , அடுத்ததாக ராட்சசன் உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த Axxess பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராஜசரவணன் இயக்கவுள்ளார்.பூர்ணேஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இந்த அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது.

தற்போது ஒரு பெரிய இடைவேளைக்கு பிறகு லாஸ்லியா விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.இந்த தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.பல மாதங்களுக்கு லாஸ்லியாவை சின்னத்திரையில் பார்த்த ரசிகர்கள் ஷோவுக்காக காத்திருக்கின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்