ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சியாக ஜொலித்தார் ஜூலி. அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. செவிலியரான ஜூலிக்கு பின் பிக்பாஸ் முதல் சீசனில் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மாடலாகவும், முழு நேர நடிகையாகவும் அவதாரம் எடுத்து அசத்தி வருகிறார். 

இந்நிலையில் Silhouette எனப்படும் நிழல் வடிவ புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்டாகி வருகிறார். ஹோம்லியாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜூலி, மாடல்கள் போல் கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு கவர்ந்து வருகிறார். 

சமீபத்தில் உடல் முழுவதும் கருப்பு நிற மை பூசிக் கொண்டு படு பயங்கரமான போட்டோஷூட்டை நடத்தினார் ஜூலி. Black Lives Matterக்கு ஆதரவாக தனது சிறு முயற்சியை வெளிப்படுத்திய ஜூலிக்கு பாராட்டுகள் குவிந்தது. இருந்தாலும் ஜூலியின் சமீபத்திய புதிய பீச் போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் பதறினர். உடல் முழுதும் மணலால் மூடப்பட்டு அவர் வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் திரைப்படங்கள் பக்கமும் தலைகாட்டினார் ஜூலி. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் பயோபிக் படம், அம்மன் தாயி படம் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். 

சமீபத்தில் ஜூலிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இச்செய்தி உண்மையில்லை இதை யாரும் நம்பவேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு தெளிவு படுத்தினார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜூலி பதிவு செய்யும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.