விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் டேனியல் ஆனி போப். ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில், இவர் பேசிய பிரெண்டு லவ் மேட்டரு என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும்.

பிக் பாஸுக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் பேசிய ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த ஆதாரங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  Thonuchu Solliton என்ற கணக்கில் ட்ரெண்டாகி வருகிறது. டேனியலின் கணக்கிலிருந்து 17 வயது பள்ளி வயது பெண்ணுடன் மோசமாக பேசியதாக அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்படி ஒரு நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகைகள் ப்ரோமோஷன் என்ற பெயரில் செய்த பித்தலாட்டங்களை தோலுரித்த நபர் தற்போது டேனியல் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் ஒருபுறம் வைரலாக, பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர் ரசிகர்கள். 

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து டேனியல் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தன்னை பற்றி அவதூறு பரப்ப சிலர் இப்படி செய்கிறார்கள் என்றும். தன்னை பற்றி வளம் வரும் தவறான செய்திகளை நீக்கவில்லை என்றால் புகார் அளிக்கப்படும் என்றும் விளக்கியுள்ளார் டேனி.

திரையுலகில் மக்கள் விரும்பும் நகைச்சுவை நடிகர்களில் டேனியும் ஒருவர். ஒருவரின் பெயரை இப்படி நாசம் செய்யலாமா ? என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.