தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்த இயக்குனர் அகத்தியனின் மகளும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையுமான விஜயலக்ஷ்மி இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, வெண்ணிலா வீடு, சென்னை 600028-|| உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
சின்னத்திரையிலும் நுழைந்த நடிகை விஜயலக்ஷ்மி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி மெகா தொடரில் கதாநாயகியாக நடித்தார். மேலும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டும்டும்டும் தொடரிலும் நடித்திருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப் பிரபலம் அடைந்தார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை விஜயலக்ஷ்மி சமீபத்தில் பகிர்ந்த புகைப்படத்திற்கு அவதூறாக கமெண்ட்டில் பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். மகன் தனக்கு பாசமாக முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் விஜயலக்ஷ்மி பகிர்ந்திருந்தார். தாயிற்கு மகன் பாசமாக கொடுக்கும் இந்த முத்தத்தை கொச்சைப்படுத்தும் விதமாக சிலர் அந்தப் புகைப்படத்தின் கீழ் கமெண்டில் அவதூறாக பேசியுள்ளனர். 

அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக,

ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு  எச்ச. அடேய் aprasidingala

என பதிவிட்டு வெளுத்து வாங்கியுள்ளார். நடிகை விஜயலக்ஷ்மியின் இந்தப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.