சீரியல்கள் வீட்டில் இருப்பவர்களின் அன்றாட பொழுதுபோக்காக மாறிப்போனது.மக்களின் மனம் கவர்ந்து ஹிட் சீரியல்கள் பல உள்ளன.குறிப்பாக விஜய் டிவியின் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை சமீபகாலமாக பெற்று வருகின்றன.வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட குடும்ப தொடர்களை விஜய் டிவி தொடர்ந்து தயாரித்து வருகின்றனர்.

ஒரே சேனலில் இருக்கும் இரண்டு தொடர்கள் இணைந்து அவ்வப்போது மெகா சங்கமங்கள் சிலவற்றை சேனல்கள் ஒளிபரப்பும்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்கள் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல்கள் இணைந்து மஹாசங்கமம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பொதுவாக மஹாசங்கமங்களை விறுவிறுப்பாக சில ஸ்பெஷல் என்ட்ரிகளை சேனல்கள் கொண்டுவருவார்கள் அப்படி இன்று ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா ராஜா ராணி தொடரின் மஹாசங்கமத்தில் பிக்பாஸ் தொடரில் கலக்கிய அர்ச்சனா சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினார்.இவருக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பிரவீன் பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ஆரி,ரியோ,சம்யுக்தா,சோம் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வருகிறது.இதன் மூலம் அடுத்த வார மஹாசங்கமம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

A post shared by Archana Chandhoke fan💖🔥 (@vj_archana_army)