விஜய் டிவியில் கடந்த 2019 பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் தொடராக உருவெடுத்துள்ளது பாரதி கண்ணம்மா.பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் இந்த தொடரின் ஹீரோவாக நடித்து வருகிறார்.ரூபா ஸ்ரீ,கண்மணி மனோகரன்,பாரினா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.500 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விஜய் டிவியின் முக்கிய தொடராக அசத்தி வருகிறது.

இந்த தொடரில் ரோஷ்ணி ஹரிப்ரியன் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இந்நிலையில் சில காரணங்களால் இவர் சில வாரங்களுக்கு முன் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.இவருக்கு பதிலாக டிக்டாக் மூலம் பிரபலமான விணுஷா தேவி புதிய கண்ணம்மாவாக நடிக்கிறார்.

புதிய மாற்றங்களுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் தற்போது புது என்ட்ரியாக பிரபல நடிகை,காமெடியன் மற்றும் பிக்பாஸ் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா இணைத்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்