தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் 25 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 17-வதாக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா. அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் நபராக வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா.

கடந்த வாரத்தில் ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற இருந்த நிலையில் தன்னிடம் உள்ள ஃப்ரீ பாஸை வைத்து தப்பித்தார். இதையடுத்து இந்த வார நாமினேஷனில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ரியோ, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய 5 பேரும் அதிக வாக்குகளைப் பெற்று எவிக்‌ஷனில் இருந்து தப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய கமலின் எபிசோடு சுவாரசியமாக இருந்தது. ரியோ குரூப் குறித்து புட்டு புட்டு வைத்தார் கமல். இதேபோல் ஆரிக்கு ஆதரவாகவும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அரசியல் குறித்தும் பேசினார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அர்ச்சனா பாலாவை தனது சகாக்களுடன் சேர்ந்து டார்கெட் செய்தார். தூங்கிக் கொண்டிருந்த பாலாவை எழுப்பி ஹவுஸ் கீப்பிங் செய்ய சொன்னதோடு மொத்தமாய் சேர்ந்து வச்சு செய்தார். மிகவும் பயங்கரமாக இருந்தது அந்த காட்சிகள். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த பிரச்சனை ஓய்ந்தது. என் குழந்தை என அர்ச்சனா கண்ணீருடன் பாலாவிடம் பேச, அம்மா என பாலா பேச பெரும் பாசப் போராட்டமாக மாறிவிட்டது பிக்பாஸ் வீடு.

அதுகுறித்து அர்ச்சனாவிடம் பேசினார் கமல். அதற்கு பாலாவின் கதையை கேட்டபோதே பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்றார் அர்ச்சனா. மேலும் நான் பாலாவிடம் சொன்ன போது கூட, நான் அன்புக்கு பழக்கமில்லாதவன் என்றார். இதனைக் கேட்ட கமல், பாலாஜி அன்பே ஸ்ட்ரேட்டர்ஜி என்றால் அதைவிட வேறு என்ன வேண்டும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள் என அவருக்கு டிப்ஸ் கொடுத்தார் கமல்.

இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் எவிக்ஷன் குறித்து பேசுகிறார் கமல். நான் தான் போவேன் என்று தோணுகிறது என்று கூறுகிறார் வேல்முருகன். நீங்க ஜோசியர் ஆயிட்டிங்களா என்று கமல் கேள்வி எழுப்புகிறார். தற்போது வெளியான ப்ரோமோவில் வெளியேறும் நபரை வழியனுப்பி வைக்கின்றனர் பிக்பாஸ் வீட்டினர்.