விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்4 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக நடிகர் ஆரியும், ரன்னராக பாலாஜி முருகதாஸூம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் ஒவ்வொருவரும் அவ்வப்போது சந்தித்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே

மேலும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இணைந்து காமெடியான சில நடன வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜியுடன் ஆடிய வேற லெவல் நடன வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் குவிந்துள்ள நிலையில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே சம்யுக்தாவும் பாலாஜியும் நட்புடன் இருந்தார்கள் என்பதும் ஒருகட்டத்தில் தனக்கு கிடைக்கவிருந்த கேப்டன் பதவியை சம்யுக்தாவுக்கு பாலாஜி விட்டுக்கொடுத்தார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜூன் மாதம் 3வது வாரத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களிடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பால் பிரபலங்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் காணப்படுகிறது.கடந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய்டிவி பிரபலங்களே போட்டியாளர்களாக பங்கேற்றனர். அதனால், இந்த முறை போட்டியாளர்களில் மாற்றம் இருக்கும்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வந்தவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் ஒப்பந்தம் ஆனார் சம்யுக்தா. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samyuktha Shanmughanathan (@samyuktha_shan)