தனுஷின் துள்ளவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின்.விசில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் ஷெரின்.அந்த படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் ஷெரினுக்காகவே மிகவும் பிரபலமாக இருந்ததது.இதற்கு பிறகு உற்சாகம்,நண்பேன்டா என்று சில படங்களில் மட்டுமே தோன்றினார் ஷெரின்.

பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் ஷெரின் கலந்துகொண்டார்.இந்த தொடரின் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக ஷெரின் திகழ்ந்தார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஷெரின்,தமிழக்தின் அனைத்து இடங்களுக்கும் ஷெரின் பிரபலமான ஒரு நபராக மாறினார்.

இந்த தொடரில் இருந்து வெளியே வந்தபிறகு இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம்,வீடியோ என்று ஏதேனும் ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களிடம் தொடர்ந்து பகிர்ந்து வருவார்.சில நாட்களுக்கு முன் தனக்கு கொரோனா கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று ஷெரின் தெரிவித்தார் அவர் விரைவில் குணமடைய பலரும் வேண்டுதல்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது தனது கொரோனா டெஸ்டில் நெகட்டிவ் வந்துள்ளது என்றும் , நெகட்டிவ் வந்தாலும் சில நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஷெரின் பூரண குணமடைய ரசிகர்களும் பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.