நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

Julie

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நடிகர், நடிகைகள் உடற்பயிற்சி செய்தும், ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த ஜுலியிடம், நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது உங்கள் வேலை என்ன ? மீண்டும் நர்ஸ் வேலைக்கு திரும்பி போவீர்களா என்று கேட்டிருக்கிறார். 

julie julie

அதற்கு பதிலளித்த ஜூலி, எல்லாரும் இதையே தான் கேட்கிறீர்கள். நான் இப்பொழுது சினிமா துறையில் இருக்கிறேன். மருத்துவம் என்பது மிகவும் புனிதமான வேலை அதற்கு முழு கவனமும், கடின உழைப்பும் தேவை. எல்லா வேலைகளையும் போல பகுதி நேரமாக இந்த வேலையை செய்ய முடியாது. என்னால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் செய்ய முடியாது. திடீரென்று ஷூட்டிங் வரும். ஆனால் அங்கு நோயாளிகள் எனக்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். என்னால் அவர்கள் உயிரோடு விளையாட முடியாது என்று கூறியுள்ளார்.