அதிகாரம் வெப்சீரிஸில் இணைந்த பிக்பாஸ் அபிராமி ! மேலும் படிக்க...
By Sakthi Priyan | Galatta | January 08, 2020 13:00 PM IST
இந்திய திரையுலகின் இசை ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் எஸ்.பி.சரண் பாடகராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர். உன்னை சரணடைந்தேன், சரோஜா, வா குவாட்டர் கட்டிங் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதுமட்டுமல்லாமல் மழை, சென்னை 28 உள்ளிட்ட படங்களை தயாரித்து, சிறந்த தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தவர்.
இவர் தயாரிப்பில் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சரண், அதிகாரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கவுள்ளார். கேபிள் ஷங்கர் திரைக்கதை வசனம் எழுதுகிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, தீனா தேவராஜன் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
தற்போது அதுல்யா ரவி, பிக்பாஸ் அபிராமி, அரவிந்த் ஆகாஷ் முக்கிய ரோலில் நடக்கிறார்கள். திரில்லராக உருவாகவுள்ள இந்த வெப்-சீரிஸில் 10 எபிசோடுகள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.