பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். நிகழ்ச்சியின் நடுவே ஓவியாவுடன் ஏற்பட்ட காதல் போன்ற விஷயங்களால் பரபரப்பாக பேசப்பட்டார். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார் ஆரவ். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, விஜய் ஆண்டனியுடன் சைத்தான் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு ரோலில் நடித்தாலும் சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா MBBS, ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

aarav

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது என அசத்தி வருகின்றனர். 

Aarav

இந்நிலையில் ஆரவ் தனது இன்ஸ்டாகிராமில் ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அப்பதிவில் ஜிம்மில் பைசெப்ஸ் பயிற்சி செய்யும் நாட்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது.