தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆரவ். பிக்பாஸ் சீசனுக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வர ஆர்மபித்தது. தற்போது ராஜபீமா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் இவர், இயக்குனர் சரண் உடன் சேர்ந்து பணியாற்ற உள்ளார். 

தல அஜித்குமார் வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற படங்களை தந்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து வசூல் ராஜா MBBS என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய பெருமையும் இவரை சேரும்.

தற்போது ஆரவ் வைத்து மார்க்கெட் ராஜா MBBS என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் ஆரவுக்கு ஜோடியாக காவ்யா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ராதிகா, யோகிபாபு போன்ற நட்சித்திரங்கள் சேர்ந்து நடிக்கவுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.