பூமி படத்தின் தமிழன் என்று சொல்லடா பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | September 10, 2020 11:51 AM IST

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.
வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹேக்டே இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்து அசத்தியிருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட் அடித்திருந்தது.
இதனை தொடர்ந்து பூமி,ஜனகனமன,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.பூமி ஜெயம் ரவி நடித்து வரும் 25ஆவது படமாகும்.இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Home Movie Makers இந்த படத்தை தயாரித்துள்ளனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 1அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது.போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
இந்த படத்தின் முதல் பாடலான தமிழன் என்று சொல்லடா என்ற பாடல் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது,தமிழின் பெருமைகளை கூறும் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்லாவே வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்
SHOCKING: Popular Tamil comedian Vadivel Balaji passes away!
10/09/2020 01:39 PM
Santosh Sivan unveils Jack and Jill poster as Manju Warrier birthday treat
10/09/2020 12:46 PM
Bigil producer's breaking statement on their next film | Ajith Kumar
10/09/2020 12:41 PM