தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி, சில நாட்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர்காக்கும் மருத்துவத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பயனாக அவரது உடல்நிலை சீரடைந்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சரியான அளவை எட்டியதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று மாலை மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடந்து மருத்துவக்குழுவினர் அவரைக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனிடையே அவர் குணமடைந்து வர வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய பாலு, டேய் பாலு.. எஸ்.பி.பாலு எழுந்து வாடா. வாடா என்ற இந்த உரிமையை நீ எனக்கும், நான் உனக்கும் கொடுத்து 50 ஆண்டு காலமாகிறது. பள்ளி நாட்களில் கூட என் நண்பர்களோடு இந்த அளவுக்கு பழகியதில்லை.

நன்றாக ஞாபகமிருக்கிறது. உனக்குத் தெரியுமா? ஆயிரம் நிலவே உன்னுடைய முதல் பாடல். நீ உச்சத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து கொண்டிருக்கிறாய். எம்.எஸ்.விஸ்வநாதன் கச்சேரி. அது சிதம்பரமானாலும் சரி. வேலூர் ஆனாலும் சரி. நீ ஒரு ஃபியட் கார் வைத்திருப்பாய். அதற்கு டிரைவர் வைக்காமல் நீயே தான் ஓட்டிக் கொண்டு செல்வாய். அப்போது உன்னுடனே நானும் வருவேன். ஏன்? நீ தூங்கிவிடக்கூடாது என்பதற்காக உன்னுடனேயே கதை சொல்லிக் கொண்டே நான் வருவேன்.

உன்னிடம் ஒருநாள் என்னை கே.விஸ்வநாதனிடம் உதவியாளராக சேர்த்துவிடச் சொன்னேன். அப்போது நான் உதவி இயக்குநர் இல்லை. என்னடா கதை எதுவும் வைத்திருக்கிறாயா என்று என்னிடம் நீ கேட்டாய். ஆம் என்றேன். வேறு ஒரு ஐடியா இருப்பதாக கூறினாய்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் STR நடிக்கவிருக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. கடந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.