விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் தொடங்கி பல விறுவிறுப்பான திருப்பாங்களோடு TRP-யில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.

இந்த தொடரில் நடித்து வரும் பல நட்சத்திரங்களும் இந்த தொடரின் மூலம் பிரபலங்களாக மாறிவிட்டனர்.
ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடர் 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் ரோஷ்ணி விலகுகிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

இவர் விலகிவிட்டார் என்றும் சிலர் தங்கள் வருத்தத்தினை தெரிவித்து வந்தனர்,ஆனால் இவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களை நாயகன் அருண் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இவர் விலகுகிறாரா இல்லை தொடர்கிறாரா என்ற பெரும் குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.இவர் விலகுவது வெறும் வதந்தி தான் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்,இதில் எந்த செய்தி உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.