விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.இந்த தொடரில் நடித்து வரும் பல நட்சத்திரங்களும் இந்த தொடரின் மூலம் பிரபலங்களாக மாறிவிட்டனர்.ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடர் 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் இருந்து சில காரணங்களால் நாயகி கண்ணம்மாவாக நடித்து அசத்தி வந்த ரோஷ்ணி விலகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது இவர் திடிரென்று விலகியது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.இவரது எபிசோடுகள் இன்னும் சில வாரங்களுக்கு வரும் என்று தெரிகிறது.அடுத்த கண்ணம்மா யார் என்ற தேடலில் சீரியல் குழுவினர் தீவிரமாக உள்ளனர்.

யாரடி நீ மோஹினி தொடரில் நடித்து பிரபலமான நக்ஷத்திரா கண்ணம்மாவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வந்தது,இதேபோல டிக்டாக் மூலம் பிரபலமான மாடல் நடிகை வினுஷா தேவி என்றும் தகவல் கிடைத்துள்ளது.இதில் வினுஷா தேர்வாக அதிகம் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.இந்த இருவரில் யார் தேர்வாக போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.