பிரபல தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பின்னர் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் பணிபுரிந்து அசத்தியவர் ஃபரீனா.சில சூப்பர்ஹிட் சீரியல்களில் சின்ன வேடங்களில் நடித்த இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா அசாத் நடித்து வருகிறார்,இந்த கதாபாத்திரத்தில் நடித்து சில விருதுகளையும் வென்று அசத்தினார்.வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி பல ரசிகர்களை பெற்றிருந்தார் ஃபரீனா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.2017-ல் Rahman Ubaidh என்பவரை திருமணம் செய்துகொண்டார்,ஃபரீனாவுக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த பிறகு பாரதி கண்ணம்மா தொடரில் இணைந்து நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வந்தார்.இரண்டு தொடர்களிலும் கலக்கிய பரினா தற்போது அபி டெய்லர் தொடரிலிருந்து விலகியுள்ளார்,இவருக்கு பதிலாக மாங்கல்ய சந்தோஷம்,ராஜபார்வை உள்ளிட்ட தொடர்களில் நடித்த கீர்த்தி இணைந்துள்ளார்.