பிரபல தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பின்னர் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் பணிபுரிந்து அசத்தியவர் ஃபரீனா.சில சூப்பர்ஹிட் சீரியல்களில் சின்ன வேடங்களில் நடித்த இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார்.

இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா அசாத் நடித்து வருகிறார்,இந்த கதாபாத்திரத்தில் நடித்து சில விருதுகளையும் வென்று அசத்தினார்.வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி பல ரசிகர்களை பெற்றிருந்தார் ஃபரீனா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.2017-ல் Rahman Ubaidh என்பவரை திருமணம் செய்துகொண்டார்,ஃபரீனாவுக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்த பிறகு பாரதி கண்ணம்மா தொடரில் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய தொடர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரான அபி டெய்லர் தொடரில் ஃபரீனா புது என்ட்ரியாக இணைந்துள்ளார்.மதன் மற்றும் ரேஷ்மா நடித்து வரும் இந்த தொடரில் நாயகி ரேஷ்மாவின் தோழியாக என்ட்ரி தரும் இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.