விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருபவர் நடிகை நீபா. அவர் கண்ணம்மா வசித்து வரும் வீட்டின் அருகில் வசிக்கும் சுமதி என்ற ரோலில் நடித்து வருகிறார். அவரது கதாபாத்திரத்திற்கும் ஓரளவு முக்கியத்துவம் சீரியலில் உள்ளது.

நீபா இதற்கு முன்பு பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் நடித்து இருந்தார். அதில் அவர் வேணி என்ற ரோலில் நடித்து இருந்தார். அவரது அப்பா மற்றும் அம்மா இருவரும் நடன இயக்குனர்கள் என்பதால் நீபா சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு அதற்காக பயிற்சிகள் எடுத்துக்கொண்டார்.

அதன் பின் அவர் மானாட மயிலாடவில் பங்கேற்று டைட்டில் ஜெயித்து இருக்கிறார். மேலும் அவரது மகள் ஸ்ரேயா உடன் இணைந்து சூப்பர் மாம் 2 ஷோவில் பங்கேற்றார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் ஹவுஸ் ஓனராகவும், சந்தேக கணவனிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் மனைவியாகவும் நடித்து வருபவர் நடிகை நீபா. காவலன் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், பயிற்சி பெற்ற பரத நாட்டிய நடனக் கலைஞர்.

அடிக்கடி தனது நடன வீடியோக்களால் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார். தற்போது புதிய காரை வாங்கியிருக்கிறார் நீபா. இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோவுடன் பதிவிட்டிருக்கிறார். 

தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் நீபா. இதையடுத்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். புதிய கார் வாங்கிய நீபாவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neepa_actress_official (@neepa_official)