விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த தொடரில் அருண் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷ்ணி சில மாதங்களுக்கு முன் விலக அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து அசத்தி வருகிறார்.புதிய எபிசோடுகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த தொடரில் இரண்டாவது ஹீரோவாக நடித்து பிரபலமானவர் அகிலன்.இந்த தொடரில் நடித்து வரும்போதே சில படவாய்ப்புகள் வர , சீரியலில் இருந்து விலகினார் அகிலன் இவருக்கு பதிலாக தற்போது பிரபல நடிகர் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக கண்மணி மனோகரன் நடித்து வருகிறார்.

அருண் ரோஷ்ணி ஜோடியை அடுத்து இந்த தொடரில் செம ஹிட் அடித்த ஜோடி அகில் கண்மணி ஜோடி தான் இவர்கள் பிரிந்தது ரசிகர்கள் மத்தியில் சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியது.இந்த ஜோடி மீண்டும் சேராதா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

தற்போது திங்க் மியூஸிக்கில் வெளியாகியுள்ள ஹோரா என்ற ஆல்பம் பாடலில் இந்த ஜோடி ஒன்று சேர்ந்துள்ளனர்.அகில் கண்மணியின் இந்த பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்