கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து வெற்றி படங்கள் தந்து சின்னத்தளபதியாக உயர்ந்து நிற்கிறார். சென்ற வருட இறுதியில் வெளியான காளிதாஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. 

Bharath

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Bharath

இந்நிலையில் நடிகர் பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ராம் படத்தில் இடம்பெற்ற ஆராரிராரோ பாடலை பாடி வீடியோவை பகிர்ந்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில், சிநேகன் வரிகளில் ஏசுதாஸ் பாடிய இந்த பாடல் அனைவருக்கும் ஃபேவரைட் என்றே கூறலாம். இதை பார்த்த நகுல், ரொம்ப அருமையாக பாடி இருக்கிறாய். உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இப்படி ஒரு திறமை உனக்குள் இருப்பது இதுவரை எனக்கு தெரியாது என பதிவிட்டுள்ளார். இனி பாடலிலும் நடிகர் பரத் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கலாம். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Yuvan rocks !!

A post shared by Bharath (@bharath_niwas) on