ரசிகர்களை கவர்ந்த காதல் பட ஜோடியின் புகைப்படம் !
By Sakthi Priyan | Galatta | December 17, 2020 14:08 PM IST
திரையுலகை பொறுத்த வரை ஒரு சில படங்கள் காலத்தை தாண்டி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகிறது. அந்த வகையில் சங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் காதல். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா நடித்திருந்தனர். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமானார்கள் பரத் மற்றும் சந்தியா.
இந்த படத்திற்கு முன்பாகவே சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருந்தாலும், காதல் படத்தின் மூலம் தான் ஹீரோவாக உயர்ந்தார். அதே போல இந்த படத்தின் மூலம் தான் நடிகை சந்தியா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அறிமுகமானதால் தான் இவருக்கு காதல் சந்தியா என்று பெயரும் வந்தது.
இந்த படத்திற்கு பின்னர் இருவரும் இணைந்து கூடல் நகர் என்ற படத்தில் நடித்திருந்தார்கள். ஆனால், காதல் திரைப்படம் அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை. திரைப்படம் திரைப்படத்திற்கு பின்னர் பரத் மற்றும் சந்தியா இருவரும் பல படங்களில் நடித்தார்கள். இதில் சந்தியா இறுதியாக கத்துக்குட்டி என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை.
இந்நிலையில் காதல் திரைப்படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் ஆனதை அடுத்து பரத் மற்றும் சந்தியா இருவரும் சந்தித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் பரத். அதில் இதே நாள், 16 ஆண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் 17, 2004. என் வாழ்க்கையை மாற்றிய நாள், காதல் என்னுடைய பயணத்தில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார் பரத். இதை பார்த்த ரசிகர்கள் காதல் 2 ஆ ? என்றும் கோலிவுட் ரசிகர்கள் விரும்பும் ஜோடி என்றும் கமெண்ட் செய்து பாராட்டினர்.
நடிகர் பரத்திற்கு சென்ற வருட இறுதியில் வெளியான காளிதாஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. அமேசான் ப்ரைம் வழங்கிய டைம் என்ன பாஸ் என்று வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். பரத் நடிப்பில் நடுவன் என்ற திரைப்படம் உருவாகி இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பிரபு தேவா இயக்கத்தில் ராதே படத்தில் நடித்துள்ளார் பரத். சல்மான் கான் ஹீரோவாக நடிக்க ஜாக்கி ஸ்ராஃப், திஷா பட்டானி, மேகா ஆகாஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
This day that year ! 16years ago !! Dec 17th 2004 the day which changed my life completely. “Kadhal” a milestone in my career. Ishwarya and Murugan then and now 😃#timeflies #lifechangingmoment #sandhya pic.twitter.com/lb1IrObxBk
— bharath niwas (@bharathhere) December 17, 2020
Official: Prashanth's comeback Tamil film - Santhosh Narayanan onboard!
17/12/2020 01:33 PM
Yashika Aanand opens up about her relationship with Balaji - latest statement!
17/12/2020 01:00 PM
These 2 housemates go to jail this week - latest Bigg Boss 4 Promo
17/12/2020 12:03 PM
Stylish first look poster of Vishal's Enemy | Arya | Anand Shankar
17/12/2020 11:18 AM