தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் பரணி இளங்கோவன்.நடிகையாக வேண்டும் என்ற கனவோடு பல போராட்டங்களுக்கு பிறகு கண்மணி சீரியலின் மூலம் தனது திரைவாழ்க்கையை தொடங்கினார்.இந்த தொடரில் சரண்யா என்ற வில்லி வேடத்தில் நடித்து முதல் சீரியலிலேயே தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் பரணி.

இந்த தொடரில் நடித்துவரும்போதே சந்திரலேகா தொடரிலும் நடித்து அசத்தினார் பரணி.தொடர்ந்து கண்மணி தொடரில் தனது நடிப்பால் மிரட்டிய பரணி இளங்கோவன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.கண்மணி சீரியல் நிறைவடைந்த பின் அக்னி நட்சத்திரம் சீரியலில் நடித்து அசத்தினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் பரணி இளங்கோவன்.இவற்றை தவிர விஜய் ஆண்டனி நடிக்கும் படம் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் படம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் பரணி.

தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புது புது அர்த்தங்கள் தொடரில் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார் பரணி இளங்கோவன்.இவரது எபிசோடுகள் டிசம்பர் கடைசி முதல் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.தொடர்ந்து தனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து அசத்தி வரும் பரணி விரைவில் முன்னணி நாயகியாக வளரவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்