பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான வைரல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | October 15, 2020 14:09 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் நாயகனாக நடித்து வரும் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.
ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டு பழைய எபிசொட்கள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரின் முன்னணி நாயகர்களுக்கென்று சமூகவலைத்தளங்களில் நிறைய ரசிகர் பக்கங்கள்,போட்டோ எடிட்கள்,வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாரதி கண்ணம்மா குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இந்த தொடரின் ஷூட்டிங் கடந்த 8ஆம் தேதி தொடங்கியது.இந்த தொடரின் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு ஜூலை 27ஆம் தேதி முதல் தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் 8.30 முதல் 9.30 வரை ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகி வருகிறது.தொடரின் புதிய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வரும் இந்த தொடர் கடந்த வார TRP-யில் சாதனை படைத்தது .அதிகம் பார்க்கப்பட்ட தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.இந்நிலையில் தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பிரவீன் தொடரின் நாயகியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் சார்பாக எப்படி இவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளார்.அதற்கு கண்ணம்மா அளித்த பதிலை கீழே உள்ள வீடியோவின் மூலம் காணலாம்
Bigg Boss 4 Tamil - Unseen Deleted Scene | Rio Raj | Nisha | Velmurugan
15/10/2020 04:21 PM
KGF 2 New Mass Promo Video - Rocky Bhai vs Adheera begins!
15/10/2020 03:21 PM