விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த தொடரில் அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் அகிலன்.இந்த தொடர் மூலம் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை அடுத்து சில முக்கிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அகிலன்.

படங்களில் பிஸி ஆனதால் சீரியலில் இருந்து பிரியாவிடை கொடுத்தார் அகிலன்.இவர் விலகிய பின்னரும் ரசிகர்கள் இவரது கதாபாத்திரத்துக்கு வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை என்றும் அகிலனை மிகவும் மிஸ் செய்வதாகவும் தெரிவித்து வந்தனர்.

அகிலன் அடுத்ததாக விஷால் நடிக்கும் வீரமே வாகை சூடும், பீட்சா 3 உள்ளிட்டபடங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக இடைவிடாது இந்த படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் அகிலன்.இந்த படங்களின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்தடுத்து சில நல்ல படவாய்ப்புகள் வருவதால் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் அகிலன்.இதனை தொடர்ந்து அகிலன் நடிக்கும் அடுத்த ப்ராஜெக்ட்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.சீரியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த அகிலன் அதே போல திரைத்துறையிலும் தனக்கான முத்திரையை பதித்து பல வெற்றிகளை குவிக்க கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.