இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பஹிரா. இத்திரைப்படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் வெளியிட்டார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தின் டீஸர் ரசிகர்களை கவர்ந்தது. 

பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கும் இந்த படத்தில் அம்ரியா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்

ஒவ்வொரு பெண்களையும் கொல்லும் சைக்கோ வேடத்தில் நடித்துள்ளார். குறிப்பாக டீஸரின் இறுதியில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, உன்னை சிக்க வச்சு கொல்லுரேண்டி மயிலே என்று வசனம் பேசி கொலை செய்யும் காட்சி பலே. கணேசன் சேகர் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அபிநந்தன், இசையமைப்பாளராக கணேசன் சேகர், எடிட்டராக ரூபன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே 50% படப்பிடிப்பை முடித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால் அதன் பிறகு கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் பணிகள் அனைத்தும் நின்றுபோனது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் சைக்கோ ராஜா வரும் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். இதன் அறிவிப்பு கொண்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.