பிரபல நடிகையின் பட்டையை கிளப்பும் போட்டோஷூட் !
By Aravind Selvam | Galatta | August 10, 2020 15:27 PM IST

இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் ஹீரோவாக மாறியுள்ளவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.இவர் அடுத்ததாக புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கம் பேச்சுலர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.
பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.பிரபல மாடல் ஆன திவ்யா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படத்தின் மீதமுள்ள ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காரணமாக பிரபலங்கள் பலரும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்களுடன் லைவ் ஆக வந்து கலந்துரையாடுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வந்தார்.இதற்கு நடிகையும்,மாடலுமான திவ்ய பாரதியும் விதிவிலக்கல்ல.
இந்த படத்தில் ஹீரோயின் ஆவதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் திவ்ய பாரதி மிகவும் பிரபலமான ஒருவராக இருந்து வந்தார்.மாடல் ஆக இருந்ததால் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் திவ்ய பாரதி.இவை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேச்சுலர் படத்தின் ஹீரோயினாக அவதரித்தார் திவ்ய பாரதி.
லாக்டவுன் நேரத்திலும் இவரது புகைப்படங்களும்,வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இவர் லாக்டவுன் நேரத்தில் யோகா செய்து பதிவிட்ட புகைப்படங்கள் செம வைரலானது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடன வீடியோ ஒன்றை பதிவிட்ட்டார்.இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.தற்போது பச்சை புடவையில் சூப்பராக ஒரு போட்டோஷூட் பண்ணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வருகிறது.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Bharathiraja condemns Meera Mitun for her controversial videos | Suriya | Vijay
10/08/2020 03:35 PM
Deepest Condolences to actor Kumki Ashvin
10/08/2020 02:58 PM
Vanitha Vijayakumar demands a sum of Rs 2.5 crores from Lakshmy Ramakrishnan!
10/08/2020 01:45 PM