இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் ஜீ வி பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் கடைசியாக வணக்கம் டா மாப்ள திரைப்படம் நேரடியாக சன் NXT தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடிப்பில் சில படங்கள் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இவர் அடுத்ததாக நடித்துள்ள பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.அடியே என்ற இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்