இந்திய திரை உலகின் நடனப்புயல் பிரபுதேவா நடன கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என தற்போது பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். கடைசியாக தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக நடிகர் பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பொன்மாணிக்கவேல், யங் மங் சங், தேள், ஊமை விழிகள் மற்றும் பகீரா ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. கையில் பகீரா திரைப்படத்தின் டப்பிங் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள பகீரா திரைப்படத்தை பரதன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.V.பரதன் தயாரித்துள்ளார் . ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் கணேசன் சேகர் இசையமைக்க ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடன இயக்குனரும் குக் வித் கோமாளி போட்டியாளருமான பாபா பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபுதேவாவுடன் இணைந்து ரம்யா நம்பீசன், அமைரா, ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சோனியாஅகர்வால் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 

இந்நிலையில் பாபா பாஸ்கர் படத்திற்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் மேலும் டப்பிங் தியேட்டரில் நடந்த ரகளையான வீடியோவையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சேட்டையான அந்த வீடியோ இதோ...
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RS Baskar (@iambababaskar)