சினிமாவில் ஹீரோயினாக மற்றும் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் ஜெனிஃபர்.பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து அசத்திய ஜெனிபர் திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான நாகவல்லி தொடரில் நடித்து அசத்தினார் ஜெனிஃபர்.இதனை தொடர்ந்து லக்ஷ்மி ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார்.இந்த தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக மாறினார் ஜெனிஃபர்.சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் ஜெனிஃபர்.

அடுத்ததாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அம்மன் தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவராக மாறினார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பாக்கியலக்ஷ்மி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகையாக மாறினார் ஜெனிஃபர்.

பாக்கியலக்ஷ்மி தொடரில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகினார் ஜெனிஃபர்.இரண்டாவது முறையாக கர்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.தற்போது தனக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.