சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக அசத்தி வருபவர் திவ்யா கணேஷ்.சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் திவ்யா,அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிப்பரப்பான லட்சுமி வந்தாச்சு தொடரிலும் நடித்து அசத்தியிருந்தார்.இதனை அடுத்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சுமங்கலி தொடரில் ஹீரோயினாக நடித்தார்.

இந்த தொடரின் மூலம் பல பாராட்டுகளையும் பல ரசிகர்களையும் பெற்றிருந்தார் திவ்யா கணேஷ்.இதனை தொடர்ந்து அட்டு,6 அத்தியாயம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் மேலும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் திவ்யா.

சில நாட்களுக்கு முன் தமிழ் சின்னத்திரைக்கு மீண்டும் திரும்பிய திவ்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் பாக்கியலக்ஷ்மி தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிர்ச்சி சிவா,மேகா ஆகாஷ் நடிக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற படம் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் திவ்யா கணேஷ் நடிக்கிறார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.