சிக்ஸர் படத்தின் பா பா பிளாக் ஷீப் வீடியோ பாடல் !
By Aravind Selvam | Galatta | September 08, 2019 13:56 PM IST

வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகியுள்ளது.இந்த படம் சில நாட்களுக்க முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மக்களின் ஆதரவோடு திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் நகைச்சுவை கலந்த பாடல் பாபா பிளாக் ஷீப் என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.அனிருத் பாடிய இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்