மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான பிரித்திவிராஜ் மற்றும் பிஜூ மேனன் இணைந்து நடித்து கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். இயக்குனர் சச்சி எழுதி இயக்கி தென்னிந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. 

தெலுங்கு சினிமாவின் பிரபலத் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முன்னணி நடிகர்களான பவன் கல்யாண் மற்றும் ராணா டகுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை நித்யா மேனன் & நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். 

ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கான பீம்லா நாயக் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தமன்.S இசையமைக்கிறார். முன்னணி இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் வசனங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது பீம்லா நாயக் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.மேலும் படத்தின் பாடல்கள் வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் பவன் கல்யானின் அதிரடியான இந்த பீம்லா நாயக் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.அதிரடியான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.