மலையாள படங்களுக்கென திரை விரும்பிகளிடம் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகள் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. அப்படி சமீபத்தில் அமோகமான வரவேற்பை பெற்ற திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர். விமர்சன ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த பிளாக்பஸ்டர் படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். 

Ayyappanum Koshiyum Director Sachy Suffers Cardiac Arrest

தற்போது இந்த படத்தின் இயக்குனர் சச்சி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

Ayyappanum Koshiyum Director Sachy Suffers Cardiac Arrest

ஜூன் 15-ம் தேதியான நேற்று சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று, வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், திடீரென இன்று ஏற்பட்ட மாரடைப்பால் திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் சச்சி விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றனர் திரை ரசிகர்கள்.