தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி,பூவே பூச்சூடவா என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் கோகுலத்தில் சீதை,நீதானே எந்தன் பொன்வசந்தம்,புது புது அர்த்தங்கள் என்று புதிய சீரியல்கள் என சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இவர்களது சூப்பர்ஹிட் தொடரான யாரடி நீ மோஹினி தொடர் விரைவில் நிறைவடைகிறது இந்த தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது,அந்த ஷூட்டிங்கிற்கு பிறகு அதே செட்டில் தங்கள் புதிய சீரியலின் பூஜையை நடத்தியுள்ளனர்.யாரடி நீ மோஹினி தொடரை தயாரித்த monk ஸ்டுடியோஸ் இந்த தொடரையும் தயாரிக்கின்றனர்.

நினைத்தாலே இனிக்கும் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில்  விஜய் டிவியின் ஆயுத எழுத்து, கலர்ஸ் தமிழின் உயிரே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான ஆனந்த் செல்வன் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த தொடரில் நடிக்கும் பிற நடிகர்கள் மற்றும் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ayutha ezhuthu serial anand selvan to star in zee tamil show ninaithale inikkum