ஒட்டு மொத்த உலக சினிமா ரசிகர்களும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட படைப்பான (அவதார 2) அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வருகிற டிசம்பர் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. பிரம்மாண்டத்தின் உச்சமாக 3டி தொழில்நுட்பத்தில் வெளிவரும் அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் உலகில் 160 மொழிகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜேம்ஸ் கேமரூன் தனது திரைப்பயணத்தில் பல பிரமிக்க வைக்கும் திரைப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக டெர்மினேட்டர், ஏலியன்ஸ், டைட்டானிக் நமது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புகளை வழங்கி வரும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அவதார்.

அதுவரை உலக சினிமா வரலாற்றில் எந்த திரைப்படமும் பெற்றிடாஏத மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரசிகர்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்ட அவதார் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அவதார் திரைப்படம் ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக அறிவுப்புகள் வெளியானது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் 2-ம் பாகம் வெளிவர உள்ள நிலையில்  அவதார் திரைப்படத்தின் 3ம் பாகம் வருகிற 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் டீசர் வெளியானது. பிரம்மிக்க வைக்கும் அந்த டீசர் இதோ…