Shades of காதல்-ங்கிற ஆல்பம் பாட்டு பெரிய ஹிட் அடிச்சிருந்தது.இந்த பாட்டுல வர ஹீரோயின் அவந்திகா மிஸ்ரா.யாருடா இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்களேன்னு நம்ம பசங்க எல்லாம் sight அடிச்சுட்டு இருந்த நேரம்.அவங்களோட உழைப்பால தெலுங்கு,தமிழ் இண்டஸ்ட்ரில பிஸியான இளம் நடிகையாக வளர்ந்துட்டு வராங்க.

அடுத்ததா நம்ம குக் வித் கோமாளி அஷ்வின் ஜோடியா என்ன சொல்ல போகிறாய் படத்துல , ஒரு ஹீரோயினா நடிச்சுட்டு வராங்க.இன்னும் அடுத்தடுத்து சில தமிழ் படங்கள்ல நடிச்சுட்டு இருக்க அவந்திகா மிஸ்ரா கிட்ட ஒரு சின்ன Interview கேட்டோம் , அவங்களும் உடனே ஓகேன்னு சொல்லி நம்ம கேட்ட கேள்விக்கெல்லாம் டக்கு டக்குனு பதில் சொன்னாங்க,அவந்திகா அவங்களோட சினிமா வாழ்க்கை பத்தி பகிர்ந்துக்கிட்ட சுவாரசிய பதில்கள் என்னென்னன்னு பார்க்கலாம் வாங்க

avantika mishra opens up on enna solla pogirai with ashwin kumar

சினிமா பயணம்,ஹீரோயின் கனவு எல்லாம் எங்க ஆரம்பிச்சது...?

உண்மையை சொல்லனும்னா இதெல்லாம் ஸ்டார்ட் ஆனது Luck-ல தான்.பெங்களூர்ல இன்ஜினியரிங் படிச்சுட்டு இருந்தேன் , படிச்சு முடிச்சுட்டு Fighter பைலட் ஆகணும்ன்னு எனக்கு ஆசை .மாடலிங் மேல உள்ள பிரியத்துனால அப்பப்போ மாடலிங் பண்ணேன்.ஒரு நாள் ஒரு நேஷனல் அவார்ட் வின் பண்ண டைரக்டர் மீட் பண்ணேன் அந்த டீம் கொடுத்த நம்பிக்கைல தான் என்னோட முதல் தெலுங்கு படம் Sign பண்ணேன்.அதுக்கப்பறம் ஒரு 150 Ad-ல நடிச்சிருக்கேன் எல்லா Langugages-லையும் , நடிக்க நடிக்க எனக்கு படங்கள் மேலயும் அது உருவாகுற Process மேலயும் பெரிய மரியாதையை வந்துச்சு.பல கஷ்டங்கள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நடிக்கிறது ரொம்பவே பிடிச்சு போக நல்ல கடினமா உழைச்சு எனக்கு ஏத்தமாதிரி கதாபாத்திரங்களா தேர்ந்தேடுத்து நடிச்சுட்டு வரேன்.

தமிழ்ல உங்களோட ஆல்பம் சாங்ஸ் Shades of Kadhal , ராசாத்தி நெஞ்ச ரெண்டுமே பெரிய ஹிட் ஆச்சு...இந்த வரவேற்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தீங்களா...?

2019-ல சோனில இருந்து ராசாத்தி நெஞ்ச பாட்டுக்கு போன் வந்தது பாட்டு கேட்டதுமே எனக்கு பிடிச்சிருந்தது அப்போவே எனக்கு இந்த பாட்டு ஹிட் ஆகிடும்னு தோணுச்சு,அதேமாதிரி ஹிட்டும் ஆகிடுச்சு.அந்த பாட்டுக்கு அப்பறம் எனக்கு ஏகப்பட்ட பாட்டு Offer வந்தது.அப்படி என்னோட Mail-ல ஒளிஞ்சுருந்த ஒரு பொக்கிஷம் தான் Shades of Kadhal.அந்த பாட்டை நான் கேட்டுட்டு எங்க அம்மாவை கேட்க வெச்சேன் அவங்களுக்கு Langugage புரியலேனாலும் இந்த பாட்டு பெரிய ஹிட் ஆகும் உடனே OK சொல்லிடுன்னு சொன்னாங்க.உடனே அந்த பாட்டுக்கு OK சொல்லிட்டேன்.அந்த பாட்டோட Success தான் தமிழ்ல எனக்கு கிடைக்கிற நிறைய வாய்ப்புகளுக்கு முக்கிய காரணம்.It was a gamble that paid off...சில நேரங்கள்ல நம்ம மனசு இதை பண்ணு Correct-ஆ இருக்கும்ன்னு சொல்லும் அப்போ அதை யோசிக்காம செஞ்சிடனும் அப்படி தான் எனக்கு நடந்துச்சு.

மியூசிக் ஆல்பம்-ல நடிச்சு அடுத்து சினிமால சின்ன சின்ன ரோல்ல நடிச்சு இப்போ வளர்ந்து வரும் இளம் ஹீரோயின் உங்களோட இந்த Transition எப்படி பார்க்குறீங்க...?

எனக்கு Experiment பண்றது ரொம்ப பிடிக்கும் அதுக்காக என் உயிரை கொடுத்து வேலை செய்வேன்.சின்னதா ஒரு வாய்ப்பு வந்தாலும் அதுல பெஸ்ட்டா பண்ணனும்னு நிறைய உழைப்பேன்.எல்லாமே ஆட்டோமேட்டிக்கா நடக்க ஆரம்பிச்சது ஒவ்வொரு வாய்ப்பும் correct-ஆ அமைஞ்சது.இது ஆரம்பம் தான் இன்னும் நிறைய இருக்கு.

avantika mishra opens up on enna solla pogirai with ashwin kumar

என்ன சொல்ல போகிறாய் , ரெண்டு ஹீரோயின் நடிக்கிற Rom-Com படம்...எப்படி ஓகே சொன்னீங்க...?

கதை கேட்டுட்டு இந்த டீம் மீட் பண்ணதும் Decide பண்ணிட்டேன் கண்டிப்பா இந்த படத்துல நடிக்கணும்னு.லவ் ஸ்டோரியா இருந்தாலும் இந்த கதை ஒரு வித்தியாசமான கோணத்துல , வித்தியாசமான முறையில சொல்லப்பட்டிருக்கு,இந்த படம் எல்லா Generation-க்கும் பிடிச்ச மாதிரி ஒரு படமா நிச்சயம் இருக்கும்.படத்துல இருக்க மூணு முக்கிய கேரக்டர் (அஷ்வின்,தேஜு,நான்) மூலமா நீங்க படத்தை உணருவீங்க அவ்வளவு அழகா கேரக்டர்ஸ் அமைஞ்சுருக்கு.என்னோட Portion நல்ல பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்கு.

அஷ்வின் கூட நீங்க Shades of காதல்-ல நடிச்சீங்க இப்போ உங்களோட முதல் தமிழ் படத்துல திரும்ப அவரோட ஜோடியா நடிக்கிறது எப்படி இருக்கு...? அப்போ இருந்த அஷ்வினுக்கும் இப்போ இருக்குற அஷ்வினுக்கும் ஏதும் மாற்றங்கள் இருக்கா...?

அஷ்வினோட வளர்ச்சியை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.வாழ்க்கை உண்மையிலேயே வட்டம்னு புரியுது.முன்னாடி இருந்ததை விட இப்போ இன்னும் அவருக்கு Confidence கூடியிருக்கு,முன்னாடி இருந்ததை விட இப்போ பிரபலமா இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக்காம இன்னமும் ரொம்ப Humble-ஆ இருக்காரு.பாட்டுல எங்க ஜோடி ஹிட் ஆச்சு படத்துல ஆடியன்ஸ் எப்படி எங்க ஜோடியை எப்படி receive பண்ண போறாங்கன்னு பார்க்க ஆர்வமா Wait பண்றேன்.

avantika mishra opens up on enna solla pogirai with ashwin kumar

புகழ்-அஷ்வின் ரெண்டு பேரோட Chemistry குக் வித் கோமாளியில பெரிய ஹிட்...படத்துல அவங்களோட Portions எப்படி வந்துருக்கு...?

குக் வித் கோமாளியில இருந்தே அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அந்த இடம் கொண்டாட்டம் தான்.ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஒருத்தரை ஒருத்தர் பாரட்டிப்பாங்க.படத்துல அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வர சீன் எல்லாம் தியேட்டர்ல விசில் சவுண்ட் பறக்கும்.

avantika mishra opens up on enna solla pogirai with ashwin kumar

அஷ்வின்-புகழ்,அஷ்வின்-அவந்திகா,அஷ்வின்-தேஜு இதுல யாரோட கெமிஸ்ட்ரி படத்துல செமயா ஒர்கவுட் ஆகி இருக்கு...?

அதை படம் பார்த்துட்டு Fans தான் சொல்லணும் , படத்தோட ஷூட்டிங் இன்னும் மீதம் இருக்கு ஷூட்டிங்கில் திரும்ப அந்த மேஜிக்கை பார்க்க நான் ஆவலா காத்துகிட்டு இருக்கேன்

புகழ் இருந்தாலே அந்த இடத்துல காமெடிக்கு பஞ்சமிருக்காது  ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களை பயங்கரமா சிரிக்க வெச்ச Moment எதாவது இருக்கா...?

புகழ் இருந்தாலே அந்த இடம் செம ஜாலியா இருக்கும் என்னை எப்பயுமே வயிறுவலிக்க சிரிக்க வெச்சுருவாரு.அதுல முக்கியமானது என்னென்னா எனக்கு தமிழ் கத்துக்கொடுக்கிறதா செம காமெடி பண்ணுவாரு,நான் இப்போ தமிழ் நல்ல பிக்கப் பண்ணிட்டேன் அடுத்த Schedule-ல அவருக்கு என் தமிழ் மூலமா ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு.

avantika mishra opens up on enna solla pogirai with ashwin kumar

என்ன சொல்ல போகிறாய் எப்படி வந்துட்டு இருக்கு....? ரசிகர்களுக்காக ஒரு சின்ன அப்டேட் எதாவது...?

ரொம்ப சூப்பரா வந்துட்டு இருக்கு , படத்தோட ஒரு பெரிய Schedule சமீபத்துல முடிஞ்சது அடுத்த Schedule சீக்கிரமே ஆரம்பமாகும்.இந்த படம் நிச்சயம் ஒரு ஸ்பெஷல் ஆன படமா நம்ம எல்லாரோட மனசுலயும் இருக்கும்னு பெரிய நம்பிக்கை இருக்கு.நல்ல ப்ரொடியூசர்,சூப்பர் டைரக்டர்,அசத்தலான நடிகர்கள்ன்னு இந்த படத்துக்கு எல்லாமே அமைஞ்சு வந்துருக்கு.சீக்கிரமே படத்தை உங்களோடு சேர்ந்து பார்க்க ஆவலா இருக்கேன்.

D பிளாக் படத்துல அருள்நிதியோட நடிச்ச அனுபவத்தை பத்தி சொல்லுங்க...?

D பிளாக் ஒரு edge of the seat திரில்லர் படம், இந்த படம் உங்களுக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும். நான் இதுவரைக்கும் பண்ணதுலயே ரொம்ப சவாலான கேரக்டர்,என்னோட சினிமா வாழ்க்கையோட ஆரம்பத்துலயே இப்படி ஒரு வித்தியாசமான படம் கிடைச்சதும் அந்த டீமோட வேலை பார்த்ததும் எனக்கு சந்தோஷம்.அருள்நிதி ஒரு Gentleman,ரொம்ப திறமையானவர் அவருக்கு நிறைய பொறுமை இருக்கு , அவர் மாதிரி ஒரு நடிகர் கூட என்னோட Begining stage-லேயே நடிக்க வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம்.

தமிழ் சினிமாவுல ஹீரோயினா கூடியவிரைவில் அறிமுகமாகுறீங்க...எவ்வளவு Excited-ஆ இருக்கீங்க...?

இதுக்காக ரொம்ப நாளா காத்திருந்தேன்.வாழ்க்கைல நிறைய பள்ளம் மேடுகளை தாண்டி வந்துருக்கேன் அதுக்கு worth-ஆ ஒரு நல்ல Debut-ஆ இருக்கும்னு நம்புறேன்.இன்னும் அடுத்தடுத்து சில தமிழ் படங்கள் இருக்கு , தமிழ் ரசிகர்களை என்டேர்டைன் பண்ற மாதிரி நல்ல தரமான,வித்தியாசமான கதாபாத்திரங்கள் எடுத்து நடிப்பேன்.

avantika mishra opens up on enna solla pogirai with ashwin kumar

இந்த மாதிரி ஒரு ரோல் பண்ணனும் அப்படின்னு எதுவும் ஆசை இருக்கா...?

மணிரத்னம் ஹீரோயின் ஆகணும்னு எனக்கு பல நாள் கனவு,அவரால தான் தமிழ் படங்கள் மீதான என்னோட காதல் அதிகமானது.சீக்கிரமே நடக்கும்னு நம்புறேன்

Future-ல இவங்களோட நடிக்கணும் அப்படின்னு நினைக்கிற ஹீரோக்கள்...?

என்னோட லிஸ்ட் கொஞ்சம் பெருசா இருக்கும்... இங்க இருக்குற நிறைய பேரைப்போல நானும் தளபதி விஜயோட பெரிய ஃபேன்.அவரோட நடிக்கணும்னு ஆசை.அவரை தவிர சூர்யா,சிவகார்த்திகேயன்,துல்கர் சல்மான்,விஜய் சேதுபதி இவங்களோடலாம் நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு பார்க்கலாம்.

அவந்திகாவின் அடுத்தகட்ட திட்டங்கள்...?

நிறைய சுவாரசியமான அப்டேட்ஸ் இருக்கு சீக்கிரமே வரும் . தமிழும் சரி மத்த மொழிலயும் சரி அடுத்த Projects பத்தின அப்டேட்ஸ் Official-ஆ வரும் , அந்த அறிவிப்புக்காக நானும் ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன்

அவங்களோட பிஸி Schedule-லயும் நம்ம கேட்ட எல்லா கேள்விகளுக்கும் செம ஜாலியா பதில் சொன்னாங்க அவந்திகா.அவங்களோட முதல் படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகணும்னு வாழ்த்துக்களை சொல்லிட்டு, தென்னிந்தியாவின் ட்ரெண்டிங் நடிகையாக சீக்கிரமே உருவெடுக்க கலாட்டா சார்பாக அவந்திகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிச்சுக்குறோம்.